Sunday 8 February 2015

அரை வாழைப்பழம்!

என்னால் வாழ்க்கையில் மறக்கவே முடியாத நிகழ்வுகளில் இதுவுமொன்று. நான் ஏழாம் வகுப்பு படித்துக்கொண்டிருந்தேன். பச்சை நிற அரைக் கால் சட்டையும், வெள்ளை நிற மேல் சட்டையும். எனது ஊரிலுள்ள பெரிய பள்ளிகளில் ஒன்றில்தான் படித்தேன். அரசு உதவி பெறும் பள்ளி. நூறு ஆண்டுகளைத்தாண்டி இன்றும் கல்விச்சேவை புரியும் பள்ளி. ஆண்கள் பள்ளி.

அன்றெல்லாம் விவரமே இல்லாத வயசு. எதெற்கெடுத்தாலும் கேள்விதான். யாராக இருந்தாலும் சரி. குறும்புத்தனம் அதிகம். எதைச்செய்யக் கூடாது என்கிறார்களோ அதைத்தான் செய்வேன் என்ற கொழுப்பு. கேட்டால் சின்னப்பையன் எனக்கென்ன தெரியும்? என்று மழுப்பல் வேறு. இன்று நான் இப்படி இருக்க முக்கியமான காரணங்களில் எனது பள்ளி வாழ்க்கை மிக முக்கியமானவொன்று.

Sunday 1 February 2015

மாதொருபாகன் - புதினம் ஒரு பார்வை


நூல் தலைப்பு   : மாதொருபாகன்
ஆசிரியர்           : பெருமாள் முருகன்
முதற்பதிப்பு     : டிசம்பர் - 2010
வெளியீடு         : காலச்சுவடு பதிப்பகம்
பக்கங்கள்          : 190
விலை                : ரூ - 140/-  

     
பொதுவாகவே நான் புதினங்கள் படிக்கும் பழக்கமில்லாதவன். ஆனால் ஒருபுறம் இந்துத்துவ அமைப்புகள் இந்தப் புத்தகத்தை எறிப்பதும் மறுபுறம் சாதிய அமைப்புகள் எழுத்தாளரை எதிர்ப்பதும் புத்தகத்தைத் தடை செய்ய வேண்டும் என்று கூறுவதும் என்னை இந்தப்புத்தகத்தைப் படிக்கத்தூண்டியது. இடையில் இந்தப் புதினத்தின் (நாவல்) ஆசிரியர் பெருமாள் முருகன் அவர்கள் அவருடைய அனைத்து புத்தகங்களையும் திரும்பப் பெற்றுக்கொள்வதாகவும் பெருமாள் முருகன் இறந்துவிட்டதாகவும் இனி அவர் எதுவும் எழுதப்போவதில்லை எனவும் சாதாரண ஆசிரியராகவே இருக்கப்போவதாகவும் கூறியுள்ளார். இவையெல்லாம் ஒருசேரப் பார்க்கும் போது உண்மையில் அவர் அப்படி எதைத்தான் எழுதியுள்ளாரென்பதைத் தெரிந்துகொள்ளத் தூண்டுகின்றது. அந்தக்கதை பற்றியும் அதன் மூலம் எனது கருத்து என்னவென்பதைப் பற்றித்தான் இந்தக் கட்டுரை.