Wednesday 27 August 2014

இப்படிக்கு தோழர் செங்கொடி


தோழர் செங்கொடி . .
மூவர் விடுதலைக்காக தன்னுயிரை மாய்த்துக்கொண்ட வீரமங்கை!
அவரது மூன்றாவது ஆண்டு நினைவுநாளாக 27-08-2014 அன்று அவரை நினைவு கூறும் விதமாக இந்தக் கவிதை.
-------------------------------------------------------------------------------------------------------------
இப்படிக்கு தோழர் செங்கொடி !! 

அற்ப  காரணமெல்லாந்  தவறெனக்  கூறிக்கொண்டு
சொற்ப  வாழ்வில்தன்  மகன்சிறையில்  வாடக்கண்டு
பொற்பா  தமிரண்டுங்  கொதித்தாற நீதிகோரச்சென்ற 
அற்பு  தம்மாளென்ற தெய்வமீதானை 

ஒற்றை  முழக்கங்கொண்டு  தாகந்தீர்ந்திட வேண்டி 
நேற்றைய  நிகழ்வுக்கெல்லாந்  தக்கமுடிவுரை  வேண்டி
பற்ற  வைத்ததேகமிப்  பெருவிடுதலை வேண்டி 
நற்ற  மிழானதென்  உயிரின்மீதானை

கற்ற  வரனைத்துமிங்  கெதுமெய்யென வுணர
பெற்ற  வர்தம்மக்கள்  விடுதலைவளியை  நுகர 
உற்ற  தெவராயிருப்பின்  மாண்டுபோவதுங்  குறைய 
மற்ற  வர்வாழ்வின்  மீதானை 

எப்படி  யேறியும்  சிறைக்கம்பிக  ளெறிவோம் 
இப்படி  யொருமுறை  மீண்டுமிங்கனு மதியோம்
எப்படி  யேனுமவன்  சகவிடுதலை  கொள்வோம் 
இப்படிக்கு தோழர்  செங்கொடி!! 

                            - குட்டிமணி செங்குட்டுவன், பெங்களூர் 2014. 

-----------------------------------------------------------------------------------------------------------------------------

அவர் இறந்த பின்பும் அவரது எண்ணங்களை மறவாலும் மீண்டும் மீண்டும் அதை நினைவு கூறுவதாக இந்தக் கவிதை அமைந்திருக்கின்றது. 

No comments :

Post a Comment