Wednesday 27 November 2013

மாவீரர் வாழ்த்து !

மாவீரர் நாளை முன்னிட்டு எமது படைப்பு


--------------------------------------------------------------------------------------------------------------
மாவீரர் வாழ்த்து !! 

கொஞ்சு  மிருபைங்  கிளியதன்  கூட்டில் 
குஞ்சு  பொறித்து  வாழ்ந்ததொரு  நாட்டில் 
நல்ல  கானகமது  தீவினிற்கு  நடுவே 
மெல்ல  பெருவாகனம்  நுழைந்தது  மதிலே 

உதிர்ந்த  கானகத்திடை  விட்டதொரு  வேளையில்
அதிர்ந்து  கேட்டதொரு  சத்தம்  அதிகாலையில் 
நட்ட  மரமெல்லாம்  புவிதழுவிய  தெதனாலது 
விட்ட  குண்டொன்று  வெடித்த  தனாலது 

வாடிய  பயிரைக்கண்டு  வாடிய  மாந்தர் 
பாடிய  தெந்திசை  புகழுடை  மாந்தர் 
அம்மை  மொழியெனப்  பைந்தமிழ் மொழியால்
எம்மை  அழிக்கத்  தொடங்கிய தொருவழியால்

கொட்டிச்  சிரித்தன  எம்பிள்ளைகளின்  சாவில் 
வெட்டிச்  சாய்த்தன  திருவிலங்கைத்  தீவில் 
விழுப்புண்  கண்டோட வழியேது மில்லை 
எழுந்து  போராடுவதன்றி  விதியேது  மில்லை 

பகை  கூடிக்கொன்று  புதைத்தது  வலியென 
தொகை கூடிச்சென்று  கிழித்தது  புலியென 
மாதுசூது  ஏதுமில்லா மாவீரர்  கூட்டம்
மதுவின்  மீதில்லை  இவர்களுக்கு நாட்டம் 

இசை  ஏழென  சுவை ஆறென 
நிலம்  ஐந்தென  திசை  நாலென 
தமிழ்  மூன்றென  வாழ்வு  இரண்டென 
ஒழுக்க  மொன்றே  வெனநின்ற  எங்கள் 

இம்மை  துறந்த  கரும்புலியே போற்றி
வெம்மை  செறிந்த  கடற்புலியே  போற்றி 
வளியெனச்  சூழ்ந்த  வான்புலியே  போற்றி 
புலியென  வீழ்ந்த  மாவீரரே போற்றிபோற்றி!! 

                              - குட்டிமணி செங்குட்டுவன், பெங்களூர் - 2013
---------------------------------------------------------------------------------------------------------------

Saturday 5 October 2013

கற்றுக்கொண்ட பாடங்கள்

முகநூலில் கடந்த சில நாட்களாய் சனநாயக நாடகாக இருந்தாலும் ராசா ராணியைப் போற்றித்தள்ளுகிறார்கள். அப்படி எந்த ராசா ராணி என்று உள்ளம் கேட்கலாம். ஆமாம் அதே ராசா ராணிதான்.

ஒரு லிட்டர் தண்ணீரை 20 ரூபாய்க்கு குடிக்கும் இவர்கள் அதே 20 க்கோ அல்லது 15 க்கோ ஒரு இளநீர் வாங்கிக் குடிக்காத கூட்டம். இவர்கள் போற்றித்தள்ளுகிறார்கள் என்றால் நான் கொஞ்சம் கவனமாயிருந்திருக்கலாம். ம்ம் அது ஒருபுறம் இருக்கட்டும். இன்று நான் சொல்ல நினைத்ததென்னவோ கற்றுக்கொண்டதைப்பற்றி கற்றுக்கொள்ள வேண்டியதைப் பற்றி.

கடந்த ஒரு வருடத்திற்கு மேல் நான் பெங்களூரில் வசித்து வருகிறேன். ஏதோ என் சொந்த ஊரில் கொஞ்ச கன்னடரும், கொஞ்ச தெலுங்கரும், நிறைய வடநாட்டவரும் இருப்பது போலத்தான் தோன்றும். இன்னும் சொல்லப்போனால் கர்நாடக மாநிலத்தில் மொத்த மக்கள் தொகையில் ஐந்தில் ஒரு பகுதி தமிழ் மக்கள் தாம். அதாவது மொத்த ஐந்தரைக் கோடியில் ஒரு கோடிக்கும் மேலாக தமிழ் மக்கள்தான். ஆனால் தொகையில் குறைவாக உள்ள கேரள மக்களில் இருந்து மூன்று சட்டமன்ற உறுப்பினர்கள் உள்ளனர். ஆனால் ஒரு தமிழர் கூடக்கிடையாது.

Tuesday 1 October 2013

Friday 13 September 2013

திரைப்படங்களின் உளவியல்

தொடர்ந்து ஒரே பொய்யை ஓராயிரம் தடவை சொன்னால் கண்டிப்பாக சில காலங்களில் அது உண்மையாக ஏற்றுக்கொள்ளப்படும். அதுதான் தற்போதும் தொடர்ந்து நடைபெறுகிறது.

சில ஆண்டுகளுக்கு முன்னால் "Mission 90 Days" என்றதொரு மலையாளப்படம் முன்னால் இந்தியப் பிரதமர் ராசீவ் காந்தியைக் கொன்றது விடுதலைப்புலிகள் தான் எனவும் அவர்களைப் பிடிக்கின்றதொரு ராணுவ வீரராய் மமுட்டி நடித்தார்.

இன்று மீண்டும் அதே கதைக்களத்தோடு ஈழப்போராட்டத்தைக் கொச்சைப்படுத்தும் விதத்தில் வேறொரு பெயரோடு வரவிருக்கும் படம்தான் "Madras Cafe".

திரும்பத்திரும்ப இந்தப்பொய்யினை திரையிட்டுக்காட்டுவதால் தவறானதொரு செய்தி அடுத்த தலைமுறைக்கு எடுத்துச்செல்லப்படுகிறது.



இந்தப்படத்தை வெறும் படமாகப் பாருங்கள் இதனால் என்ன வந்துவிடப்போகிறது எனக் கேட்கும் முட்டாள்களே, இதே போல் நாங்கள் இந்திய ராணுவமும் சிங்களவனும் சேர்ந்து செய்த நாசங்களை ஒரு படமாக நாங்களும் எடுத்து வெளியிடுகிறோம். அப்பொழுது நீங்கள் அதனை வெறும் படமாகப் பார்க்கத்தயாரா? ?? இல்லாத இந்திய இறையாண்மை பதிக்கப்படும் என முந்திக்கொண்டு முன்வரிசையில் நிற்பது நீங்களாகத்தான் இருக்கும்.

# உங்களுக்கு வந்தா இரத்தம் எங்களுக்கு வந்தா தக்காளிச் சட்னியா????