Saturday 26 September 2015

தீயாக தீபம் திலீபன்

இந்திய ராணுவத்தின் ஈழத்து ஆக்கிரமிப்பை எதிர்த்து காந்தி வழியிலேயே உண்ணாநிலை போராட்டத்தை கையிலெடுத்து அவரது உயிரை விட்டார். விடுதலைப் புலிகள் ஆயுத வழியில் மட்டுமல்ல அகிம்சை வழியிலும் போராடியதற்கு திலீபன் உதாரணம். அவரது நினைவாக இந்தக் கவிதை 

---------------------------------------------------------------------------------------------------------------- 
செங்கதிர் வீசக்கூசும்  மயிலோன் முகமுமதன்
பங்கானச் சித்திரக் கருவிழியு மதனாடியும்
சிங்களத்தைக் கூர்போடுஞ் சொல்லும் பல்லுமதன்
மஙகாத புன்னகையும தழகு

தங்கை  யரும்பாலகரும்  படுந்துயரா  லுந்தன்
தங்கை  யர்போல்  உள்நினைந்து ஈழத்து
மங்கை  யர்வாழ்வும்  தலைமுறையும்  சீர்தூக்கநீ
வேங்கை  யெனவிருப்பது விரம்

தங்க  மழைபொழியுந்  தென்பெருநில  முமதன்
வங்க  ஏரிக்கரை  செழித்தாட்சியு  மெவரோ
பங்கு  போடவந்தெ  மையழிக்கு  மதனால்நீ
சங்கென  முழங்குவது  பற்று

இந்தி  ரமைதிப்படை  யென்னும்  பெயரோடு
வந்தி  றங்கியதோர்  கூலிப்படை  யதுவோடுநீ
வெந்நி  றப்புறா  கொண்டழித்துக்  கூண்டோடு
சந்தி  சிரித்ததுவே  துணிவு

செங்கரும்புச்  சாறும்  செவ்வாழை  நறுந்தாரும்
நொங்குமதன் மேவும்  நன்மருந்தாகி  நெல்லியும்
மாங்கனியும்  நன்னீரும்  மருத்திருந்த நின்னை
தாங்கிய  தேகமது  தியாகம்

- குட்டிமணி செங்குட்டுவன், பெங்களூர். 
--------------------------------------------------------------------------------------------------------