Sunday 2 February 2014

எதுதான் பெண் சுதந்திரம் ?

# வடகிழக்கு மாணவன் டெல்லியில் வாய்த்தகராறினால் பல பேரால் அடித்துக் கொலை செய்யப்பட்டார்

# உத்திரபிரதேசத்தின் முசாபர்நகரில் சகோதரன் முன்னே பெண் நான்கு பேரால் பாலியல் வன்கொடுமை

# மேற்குவங்கத்தில் வேறு இனத்தவனைக் காதலித்ததால் பஞ்சாயத்தின் தீர்ப்பின்படி பெண் பல பேரால் கற்பழிப்பு

# தொடர்ந்து தினந்தோறும் செய்திகளில் வந்துகொண்டிருக்கும் பெண்களுக்கெதிரான வன்முறைகளுங் கொடுமைகளுஞ் சொல்லி மாலாது

இப்படியிருக்கையில் ஒரு சாதாரண தமையனாய் தகப்பனாய் கணவனாய் எப்படி ஒரு ஆண்மகன் ஒரு பெண்ணை இந்தச் சமூகவெளியில் அனுப்ப எத்தனிப்பான் ?? நீங்கள் படித்துப் பட்டம் வாங்காவிட்டாலும் பரவாயில்லை, பெண் வேலைக்குப்போய்தான் குடும்பம் கஞ்சி குடிக்காவிட்டாலும் பரவாயில்லை நீதான் முக்கியமென வீட்டிலேயே இருக்கச் சொல்லும் அத்துனை அப்பாக்களின் அண்ணன்களின் பாசத்தை கொச்சைப்படுத்தும் பெண்ணியவாதிகளே இப்போது புரியும் இத்தனைக் கொடுமைகளுக்கும் அடுப்பங்கரையைக் காட்டிலும் வேறுபாதுகாப்பு இருக்கவேமுடியாதென்று.

பெண்ணின் முன்னேற்றத்தை தடுப்பவர்களல்ல நாங்கள். கண்ணகி என்ற பெண்ணுக்காக நீண்ட காவியம் வரைந்தவர்கள் நாம். அவ்வைபோலொரு சிறந்த பெண்கவி இருந்ததில்லை இவ்வுலகில். ஆணுக்கு நிகராக களத்தில் எதிரியை பின்னங்கால் பிடரி தெறிக்க ஓடச் செய்தனர் ஈழத்தின் எம்பெண் போராளிகள். முல்லைக்குத் தேரும் மயிலுக்கு போர்வையும் கொடுத்த எமக்கு பெண்ணுக்கு என்ன கொடுக்கவேண்டும் எனத் தெறியாமல் இருக்குமோ?

நாகரிகம் வளர்ந்துகொண்டே இருக்கும் இக்காலத்தில் இப்படியான சம்பவங்கள் நெஞ்சைக் கிழிக்கிறது. இவ்வளவு நடந்தும் எந்தப்பெண்ணும்(பெருவாரியாக) இதைப்பற்றி சமூகவலைத்தளங்களில் கோபப்பட்டு எழுதியதாகத் தெறியவில்லை. நடிகைகளின் படங்களைப் போடுவதே இவர்களுக்குப் பிழைப்பாகிப்போனது.

இப்போதும் சொல்கிறேன் பெண்களுக்கான வன்மங்கள் குறையும்வரை நாங்கள் உங்களின் மீதான அக்கறையில் உங்களைச் சில கட்டுப்பாட்டில் இருக்கச்சொல்வதை இனிமேலும் பெண்ணடிமை எனக் கொச்சைப்படுத்த வேண்டாம்.

கோபத்தின் விளிம்பில்