Thursday 17 July 2014

"ஜி" என்பதன் பின்னொட்டு வரலாறு



கடந்த சில வருடங்களாகவே தமிழகத்தின் இளம் தலைமுறையினர் எந்தத்திசையை நோக்கிப் பயணிக்கின்றனர் என்றே புரியாத புதிராக உள்ளது. நண்பர்கள் தங்களுக்குள் பேசிக்கொள்ளும் போதும் சரி நெருக்கமானவர்களை அழைக்கும் போதும் சரி டேய், மச்சி, மச்சா, மாமா மற்றும் மாப்ள என்று அழைப்பது வாடிக்கை. இன்னமும் அப்படித்தான். ஆனால் கடந்த நான்கு வருடங்களாக அதிகமாக இளைஞர்களிடத்தில் புழக்கத்தில் இருக்கும் ஒரு வார்த்தை “ஜி”. வாங்க ஜி, சொல்லுங்க ஜி, அப்பிடி ஜி இப்புடி ஜி ஜி ஜி ஜி என இவர்கள் கூறுவது கேட்டு செவி அலுத்துவிட்டது. போதாகுறைக்கு திரைப்படங்களிலும் எறிகிற தீயில் எண்ணெய் ஊற்றுவது போல. இந்த ஒற்றை எழுத்துச்சொல் யாருடையது? இதன் அர்த்தம் என்ன? இதை நாம் பயன்படுத்துவது சரிதானா? என்ற இத்துனை கேள்விகளுக்கும் அடிநாதம்தான் இந்தக் கட்டுரை.


இந்தச்சொல் வடநாட்டவரால் அதிகமாக பயன்படுத்தப்படுகிறது. பெயரின் ஒட்டாகவே அவர்கள் இச்சொல்லைப் பயன்படுத்துகின்றனர். மரியாதை நிமித்தமாக யாரையெல்லாம் அழைக்கின்றனரோ அவர்களின் பெயரின் பின்னொட்டாக இச்சொல் வருவது கண்கூட காணலாம். காந்திஜி நேருஜி முதல் இன்றைக்கு மோடிஜி வரைக்கும். உண்மையில் வார்த்தையென்றால் அதற்கு அர்த்தம் இருக்கவேண்டும். தனியாக நிற்கும்போது. தமிழில் மரியாதைக்கு ஐயா என்றும் ஆங்கிலத்தில் சார் என்றும் சொல்வது வழக்கம். அதுவேதான் இந்தியில் ஜி என்ற சொல்மூலம் உணர்த்துவதாக நினக்கின்றேன். ஆக இச்சொல்லின் மூலம்தான் என்ன என ஆராய்கையில் பின்புலம் விளங்குகிறது. தமிழின் திரு என்ற சொல்தான் வடநாட்டின் ஸ்ரீ என்று திரிந்துள்ளது நாம் அறிந்ததே (பாவாணர் இதை நிருபித்துள்ளார்). அதேபோலத்தான் இச்சொல்லும்.

உங்களுக்காக சில உதாரண வார்த்தைகளை இங்கே சொல்கிறேன். நினைவில் கொள்க. தங்கச்சி, அண்ணாச்சி, அப்புச்சி, அம்முச்சி. இவை நாம் பேச்சு வழக்கில் தமிழில் புழங்கும் சொற்கள். தமிழில் இவற்றை எழுதும் போது தங்கை அண்ணன் அப்பார் அம்மார் என எழுதுவதுதான் வழக்கம். ஆனாலும் சிலர் பேச்சுத்தமிழை எழுதும் போது இவற்றை அப்படியே எழுதுவதைக் காணலாம். இதில் தவறேதும் இல்லை. இச்சொற்களை உற்றுநோக்கினால் நமக்கு ஒருவுண்மை விளங்கும்.

இந்தச்சொற்களனைத்தும் “சி” என்ற ஒட்டைத் தாங்கி நிற்கின்றன. இந்த ஒட்டின் அர்த்தம் என்னவென்று தெறியவேண்டினால் அந்தச்சொற்களின் அர்த்தத்தை பார்க்க வேண்டும். இவையனைத்தும் உறவுகளை குறிக்கும் சொற்களே. ஆக அன்புடன் அழைக்கும் பச்சத்தில் இந்தவொட்டு சொல்லின் இறுதில் சேர்ந்து அளவுகடந்த நமது அன்பை வெளிக்கொணர்கின்றது. இது தனியாக நிற்குமேயானால் ஒரு பொருளும் தரா. வெறுப்பு என்ற உணர்ச்சியைத்தவிர. அதுவொரு சொல்லாக நிற்காது. ஆக தமிழில் இதற்கான விளக்கம் நன்கு உள்ளது. இது வேறு மொழிகளில் இல்லையா என்ற கேள்விக்கும் பதிலுண்டு. தமிழின் கிளை மொழியான மலையாளத்தில் “சேச்சி” என்ற சொல்லுள்ளது. இதுவும் உறவைக் குறிப்பதுதான். நமது மொழியின் எச்சம் மலையாளத்தில் இருப்பதற்கு இதுவும் ஒருசான்றே.

ஆக நமது மொழியின் இந்த “சி” ஒட்டைத் திருடி வடநாட்டவர் அவர்களது மொழியில் “ஜி” எனத்திரித்து அதை மறியாதை நிமித்தமான ஒரு சொல்லாக வைத்துவிட்டனர். அவர்கள் உறவைக் குறிக்கும் எந்தச்சொல்லிலும் இந்தமாதிரியான ஒட்டை வைத்திருக்கவில்லை என்பது இவ்வொட்டு நம்மிடமிருந்து திருடியதுதான் என்பதற்கான முழுச்சான்று. அதை நம்மிடமே திணித்து நம்மை இப்போது பயன்படுத்தவும் வைத்துவிட்டனர். ஜி என்ற ஒலி தரக்கூடிய எழுத்தோ சொல்லோ நம்மிடமில்லை. ஆக இந்தச்சொல்லை நம்மிடம் திணித்து கிரந்த எழுத்துத்தான “ஜி” யை நம்மிடம் நிலக்கச்செய்யும் சதிதான் இது.

இதை விளக்கிச்சொல்ல ஆளில்லாததால் தமிழர் அனைவரும் இந்தச்சொல்லை பயன்படுத்தவும் தயங்கவில்லை. ஏன் தமிழர் நலனுக்காக பாடுபடக்கூடிய தமிழ் ஆர்வலர்கள் கூட இதைக் கண்டுகொள்ளாதது வேதனையே. இனியாவது தமிழர்கள் இவ்வொட்டை பயன்படுத்த வேண்டாமென்றும், மற்றவர்களுக்கும் இதை எடுத்துச் சொல்லுங்களென்றும் கேட்டுக்கொள்கிறேன்.

4 comments :

Unknown said...

Its true

குட்டிமணி செங்குட்டுவன் said...

நன்றிகள் சபரி :)

Unknown said...

Naan kandipaaga intha sol lai inimael payanpadutha anumathikka povathillai... Intha katturaiku nandri...

Anonymous said...

Jee inimae thalae aaaga maarum.. vizhipunarvuku nandree. Vaazhga tamizhum thangalai pondru tamizh aarvalargalum...

Post a Comment