Sunday 8 March 2015

யாது வேண்டின் பெண்ணுக்கு - மார்ச்சு 2015

உழைக்கும் மகளிர் நாளை முன்னிட்டு மகளிர் மீதான தவறான கூற்றுகளை உடைத்தெரிந்து எது உண்மை என்பதை விளங்க வைக்கத்தான் இந்தக் கவிதை. இளந்தமிழக இயக்கத்தின் "விசை" இணையதளத்தில் இந்தக் கவிதை வெளியிடப்பட்டது 
--------------------------------------------------------------------------------------------------------------------
அம்மி யோடுமதன் ஆட்டாங்கல் லோடும்
விம்மி மிகுவேலை புரிவார்க்குச் சொல்லில்லை
கணினி யோடுமதன் படிப்போடும் தன்னார்வமோடும்
பணியா லிவர்க்குக்கடுஞ் சொல்லே

திங்க ளொருமுறை வெடிக்குமண்டச் சிதைவால்
நீங்க ளென்றுமிங்கு தீட்டென்பாரிவரே இவ்வுலக
விண்ணு மதுதாண்டி வெடிக்குமண்டச் சிதைவை
தன்பே ரறிவென் றுரைப்பார்

துணையற்ற இளம்பெண்ணை விதவையென் பார்பொய்
வினையற்ற மெய்தன்னை வேற்றுடமை யென்பாரிவள்
மறுமணம் மறுத்துப்பல காரணஞ்சொல்லிக் கூத்தனின்
இருமணம் பேராண்மை யென்பார்

தாய்நா டென்பார் காவிரிபரணி யென்பார்தம்
தாய்மொ ழியென்பார் அம்மனுமவள் காளியென்பாராக
பெண்மை இகழ்பவர்சிறு நாவறுத்துக் கோடிபல
உண்மை புகழ்வதெம் செயல்

-    குட்டிமணி செங்குட்டுவன். 01-மார்ச்சு-2015

----------------------------------------------------------------------------------------------------------------------