வைத்தியநாதனும்
பெருமாளும் நேர் எதிர். ஆனால் ஒரே பள்ளியில் ஆசிரியராக பதினைந்து வருடங்களுக்கும் மேலாக
வேலை செய்கிறார்கள். ஏனோ அன்று பெருமாள் உடல்நிலை சரியில்லாத காரணத்தால் வரவில்லை.
தலைமை ஆசிரியரின் வேண்டுகோளுக்காக வைத்தி பெருமாளின் வகுப்பிற்குச் செல்ல நேர்ந்தது.
வேண்டாவெறுப்பாக.
Sunday, 19 April 2015
Saturday, 11 April 2015
சரவணபெளகொளா - பயணப்பதிவு
கூட வேலை செய்பவரின்
திருமணத்திற்காக சரவணபெளfகொளா செல்லும் வாய்ப்பு கிட்டியது. அவர் ஒரு சமணர் என்பதால்
சரவணபெளகொளாவில் அவரது திருமணத்தை நடத்தத் திட்டமிட்டிருந்தார். ஆனால் அவர் பெல்காம்.
வட கருநாடகத்தைச் சார்ந்தவர். வரவேற்பை பெல்காமில் திருமணத்திற்குப் பிறகு வைத்துக்கொள்ளத்
திட்டமிட்டிருந்தார். நான் இதை நல்லதொரு வாய்ப்பாகக் கருதி எனது இரு சக்கர வண்டியில்
மொத்தமாக 350 கி.மீ தொலைவு ஓட்டவும் அந்தச் சமண தளத்தைப் பார்க்கவும் முடிவுசெய்தேன்.
அந்த முழு பயண அனுபவம்தான் இந்தப்பதிவு.