![]() |
| குட்டிமணி என்கிற செல்வராசா யோகச்சந்திரன் |
Wednesday, 23 July 2014
யார் அந்த “குட்டிமணி" ??
Thursday, 17 July 2014
"ஜி" என்பதன் பின்னொட்டு வரலாறு
கடந்த சில வருடங்களாகவே தமிழகத்தின் இளம்
தலைமுறையினர் எந்தத்திசையை நோக்கிப் பயணிக்கின்றனர் என்றே புரியாத புதிராக உள்ளது.
நண்பர்கள் தங்களுக்குள் பேசிக்கொள்ளும் போதும் சரி நெருக்கமானவர்களை அழைக்கும் போதும்
சரி டேய், மச்சி, மச்சா, மாமா மற்றும் மாப்ள என்று அழைப்பது வாடிக்கை. இன்னமும் அப்படித்தான்.
ஆனால் கடந்த நான்கு வருடங்களாக அதிகமாக இளைஞர்களிடத்தில் புழக்கத்தில் இருக்கும் ஒரு
வார்த்தை “ஜி”. வாங்க ஜி, சொல்லுங்க ஜி, அப்பிடி ஜி இப்புடி ஜி ஜி ஜி ஜி என இவர்கள்
கூறுவது கேட்டு செவி அலுத்துவிட்டது. போதாகுறைக்கு திரைப்படங்களிலும் எறிகிற தீயில்
எண்ணெய் ஊற்றுவது போல. இந்த ஒற்றை எழுத்துச்சொல் யாருடையது? இதன் அர்த்தம் என்ன? இதை
நாம் பயன்படுத்துவது சரிதானா? என்ற இத்துனை கேள்விகளுக்கும் அடிநாதம்தான் இந்தக் கட்டுரை.
